வெள்ளி, 5 மார்ச், 2010

குறிப்பு திருட்டு

சமீப காலமாக ஏதாவது ஒரு தளத்தில் யாராவது ஒருவரால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை (சமையல் குறிப்புகள் உட்பட) எடுத்து கொஞ்சம் மாற்றியோ இல்லை அப்படியேவோ தனது பெயரில் வேறு தளத்துக்கு கொடுப்பது அதிகமாகி விட்டது. எதற்காக இந்த திருட்டு வேலை? பெயரும், புகழும் வேண்டியா? அப்படி வேண்டுமாயின், தன் சொந்த குறிப்புகளை, திறமையை கொடுக்க வேண்டியது தானே? இப்படி திருட்டுத்தனம் செய்து பேர் வாங்கச் சொல்லி யார் கேட்கிறார்கள்? கஷ்டப்பட்டு சொந்தக் குறிப்புகள் கொடுத்தவர்களின் மனது என்ன கஷ்டப்படும்?

கொஞ்ச நாள் முன்பு தான் தோழி ஜலீலாவின் குறிப்புகள் எடுக்கப்பட்டு வேறு பிளாக்கே வந்தது என்று சொன்னார்கள். குறிப்புகள் கொடுப்பவர்கள் எல்லாரும் எல்லா இடத்திலும் செக் பண்ணிக் கொண்டா இருக்க முடியும்?

நமக்குத் தெரிந்த சில விஷயங்கள் நம்மோடு போகாமல், பலருக்கும் பயனளிக்கட்டுமேன்னு தான் சொல்றோம். தேவையானவங்களுக்கு அந்த லின்க்கை கொடுத்து படிக்க சொல்ல வேண்டியதுதானே! தனக்கே வேண்டுமென்றால், பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளட்டுமே! அதை விட்டு என்னவோ தானே கஷ்டப்பட்டு கொடுத்த குறிப்பு போல் கொடுத்து இப்படி பேர் சம்பாரிக்க நினப்பது அவர்களுக்கே கேவலமாக இல்லையா?

எது எதைத்தான் திருடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இன்னும் எவ்வளவு பேர் என்ன சொன்னாலும், இது போல் திருடுபவர்கள் மாறுவது போல் தெரியவில்லை.

அவங்க அவங்க குறிப்புகளை பத்திரமாக லாக்கரில் வைத்து பூட்டி வைத்துக் கொள்ளுங்கப்பா. இப்படி சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்:-) திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிறது இதற்கும் பொருந்துமோ?

(அறுசுவை.காம் தளத்தில் உள்ள  என்னுடைய பல குறிப்புகள் பலராலும் திருடப்பட்டு வெவ்வேறு தளங்களில் வேறு பெயர்களால் பதியப்படுவதைக் கண்டு ஏற்பட்ட மன உளைச்சலின் வெளிப்பாடே இந்தப் பதிவு:-( )

10 கருத்துகள்:

kavisiva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
kavisiva சொன்னது…

செல்விம்மா அறுசுவையின் எல்லோருடைய குறிப்புகளும் பல இடங்களில் காப்பியடிக்கப்படுகின்றன. நானும் அங்கெல்லாம் போய் கேள்வி கேட்டு எந்த பிரயோஜனமும் கிடைக்காததால் போய்த் தொலைங்கடான்னு விட்டுட்டேன். நம்முடைய பெயரை தமிழில் தட்டி கூகுளில் தேடினால் எங்கெங்கு காப்பியடிச்சுருக்காங்கன்னு கண்டு பிடிச்சுடலாம். கண்டுபுடிச்சு என்ன செய்ய?!

Asiya Omar சொன்னது…

ஆமாம் செல்விக்கா,கஷ்டப்ப்ட்டு நாம் செய்து பார்த்து போட்டோ எடுத்து அனுப்ப அதை ஜாலியாக கூலாக போட்டு இருக்கும் பொழுது வயிறு எரிகிறது.திருடுறவங்க திருடிட்டு தான் இருப்பாங்க.அதை நிறுத்த முடியாது,மானங்கெட்ட பொழைப்பு.திருடி போட்டது பெரிய தினசரி செய்தி நிறுவனம் ஆச்சே.கண்ணால பார்த்து விட்டு நம்பாமல் இருக்க முடியலை,அவங்க ஆதிக்கம் நம்ம லெவலில் கூட இருக்கு.

ஸ்வீட் சொன்னது…

உண்மைதான்.அட்லீஸ்ட் பெயரை போட்டாவது வெளியிடலாம்.

Jaleela Kamal சொன்னது…

செல்வி அக்கா எல்லாத்தையும் போட்டுட்டாஙகளா, ஐய்யோ அய்யோ எங்கே போய் முட்டி கொள்வது, எல்லா வீட்டு சாப்பாட்டையும் திருடி பூட்டாங்களா////
நானும் சம்பந்த பட்ட இடத்திலெல்லாம் போய் கமெண்ட் வழியா போய் எல்லார் சார்பாவும் சண்டை போட்டாச்சு பயன்ல்லை. இப்படி ஹே ஹே நான் செயிலுக்கு போரேன் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று வடிவேலு சொல்வது போல்.

ஹே ஹே நானும் பதிவர் என்று சொல்லி நம்ம பிளாக்கில் தான் போட்டு நான் ஆதங்கத்தை தீர்த்து கொள்ள வேண்டியதா இருக்கு.

அனியாயத்து ஒரு திரு(டி)டர்கள் ஒரு சைட்டே ஆரம்பிச்சிட்டாங்கன்னா எனக்கு ரொம்ப ஆச்சரியாமா போச்சு.

கீழே கேட்க போனா உங்கள் குறிப்பை பார்த்து தானே நாங்க டைப் பண்ணோம் என்று வேறு வெட்கம் இல்லாம சொல்றாஙக.

இன்னொரு சிரிப்பு என்னன்னா ஒரு 10, 15 குறிப்பின் கீழ் திட்டினேன் அதுவும் ஆசியா குறிப்பில் போய் நன்றி ஜலீலாவாம்.

Jaleela Kamal சொன்னது…

ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை ஒட்டு மொத்த குறிப்பையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து இனி நெட்டில் குறிப்பே கொடுக்க கூடாதுன்னு எல்லாம் முடிவு பண்ணினேன்/

என்ன‌ செய்வ‌து பாச‌க்கார‌ ப‌ச‌ங்க‌ கொடுக்க‌ வைத்துட்டாங்க‌/

kavisiva சொன்னது…

செல்விம்மா ஒரு பிரபல தளத்தில் அறுசுவையில் நாம் கொடுத்திருந்த பல குறிப்புகளும் அப்படியே அன்றன்றே காப்பியடிக்கப்பட்டு போட்டிருந்தானுங்க. படுபாவிங்க எழுத்துப்பிழைகளைத் திருத்தணும்னு நினைக்கல. ஆனா ஞாபகமா குறிப்பு கொடுத்தவர் பெயரை மட்டும் அவனுங்க பெயருக்கு மாத்திருக்கானுங்க.
இதை அந்த தளத்தில் உறுப்பினர் பதிவு செய்து கேள்வி கேட்ட அடுத்த நாள் நான் கேட்டிருந்த கேள்விகள் மட்டும் நீக்கப்பட்டிருந்தது. 2நாள் கழித்து என் உறுப்பினர் பதிவே ரத்து செய்யப்பட்டு விட்டது.
பாபு அண்ணாக்கும் இது பற்றி மெயில் அனுப்பியிருந்தேன். இப்போது அக்குறிப்புகள் அனைத்தும் நீக்கப் பட்டு விட்டன.
ஆனால் மற்ற தளங்களில் இன்னும் இருக்கின்றன. அதிலும் கொடுமை என்னன்னா அறுசுவையின் தள அமைப்பு கூட ஒரு தளத்தில் அப்படியே காப்பியடிச்சிருக்கானுங்க!
இதெல்லாம் ஒரு பொழப்பு!

அண்ணாமலையான் சொன்னது…

அட விடுங்க.. எப்டியோ நல்ல விஷயம் நாலு பேருக்கு போய் சேர்ந்தா சரி...

Jaleela Kamal சொன்னது…

கவி நான் கொடுத்துள்ள பிழையான குறிப்பையும் அப்படியே எடுத்து போட்டு இருக்காங்க.

என்ன பொழப்போ.

இன்று கூட ஒரு இடத்தில் எடுத்து போட்டு இருக்காங்க. என்ன செய்வது என்றே தெரியல/

செந்தமிழ் செல்வி சொன்னது…

கவி,
எனக்கு எல்லாம் செக் செய்வத்ற்கு நேரம் கூட இருப்பதில்லை.
ஏதேச்சையாக் நான் பார்க்கப் போக ஒரு தளத்தில் என் குறிப்பை தன் பெயரில ஒரு அம்மணி போட்டிருந்தாங்க. நான் அங்கே போய் பெயர் பதிவு செய்து, ஆதாரத்துடன் காப்பி அடித்த குறிப்புன்னு நான் போட்ட சில நிமிஷங்களிலேயே அக்குறிப்பை நீக்கிய அந்தத் தளத்திற்க்கு கண்டிப்பாக நான் நன்றி சொல்லியே தீர வேண்டும். (நன்றி அட்மின்!)
ஸ்னேகிதி ஸாதிகா,
பெயருடன் போட்டால் யார் கேட்கப் போகிறார்கள? திருடுபவர்கள் பெயர் போடுவார்களா, என்ன?
ஆசியா,
இப்படி ஆத்திரம் தீர திட்டிக் கொள்வதை விட வேறு வழி இல்லை தான்:-(
ஜலீலா,
திரும்ப திரும்ப போய் சண்டை போட்டால் கவி சொன்னது போல் தான் செய்வாங்கன்னு இவரும் சொன்னார். ம்ம்ம், நானும் பார்த்தேன். என்ன செய்ய முடியும்?
சகோ. அண்ணாமலையான்,
நாலு பேருக்கு போவதற்காகத்தான் நாமும் சொல்கிறோம். சொல்லட்டும். அதை ஏன் அவர்கள் பெயரில் போட்டு பேர் வாங்கவேண்டும்?
கருத்து பதிந்த அனைவருக்கும் நன்றி.

கருத்துரையிடுக